Skip to main content
Breaking News
Breaking

லண்டன் நடிகருடன் ப்ரேக்கப் செய்துவிட்டாரா ஸ்ருதிஹாசன்?

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதியுடன்‘லாபம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் காதலித்து வந்தவருடன் ப்ரேக்கப் செய்துவிட்டார் என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர்.
 

shruthi hassan

 

 

லண்டன் தியேட்டர் ஆர்டிஸ்ட் மைக்கேல் கார்சலேவும் ஸ்ருதி ஹாசனும் காதலித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோதிலும் தங்கள் காதலை பற்றி வெளிப்படையாக சொன்னதில்லை. 
 

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில், “வாழ்க்கையின் இன்னொரு புதிய கட்டத்தைத் தொடங்குகிறேன். அனைத்து காதல் பாடங்களுக்காகவும் நன்றி... இருண்ட இடங்களின் அடியாழத்தில் தான் ஒளிபிரகாசிக்கும். மேலும் இசை, மேலும் படங்கள் என எதிர்நோக்கியுள்ளேன். என்னுடனே நான் இருப்பது எப்போதுமே என்னுடைய பெரிய காதல் கதையாக இருந்துள்ளது” என்று பதிவுசெய்துள்ளார்.
 

மைக்கேல் கார்சலே தனது ட்விட்டர் பதிவில், “வாழ்க்கை நம் இருவரையும் உலகின் எதிர் துருவங்களில் வைத்துள்ளது. ஆகையால், நாம் இருவருமே துரதிருஷ்டவசமாக தனித்தனி பாதையில் செல்ல வேண்டியுள்ளது. ஆனாலும், அவர் என்னுடைய சிறந்த தோழி தான். அவரை என் தோழியாக அடைந்ததிற்கு மிக்க நன்றி. லவ் யூ!” என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் இவ்விருவரும் தங்களின் காதல் வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்