![Senior Leader Of Indian Communist Party NallaKannu Met and appreciated jai bhim team](http://image.nakkheeran.in/cdn/farfuture/zF83odFBOPeCVvFObZHaHQvfpGwK55digjHICLDC9Yc/1637906688/sites/default/files/inline-images/nallakannu_3.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர்.
இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக கட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலரும் அறிக்கை வெளியிட்டனர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/PKrf9bqU5BtG5Kd0VAfNzdfTxqQbrLWd2Ru4zrlN7Jw/1637906715/sites/default/files/inline-images/article-inside-ad_57.jpg)
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ‘ஜெய் பீம்’ படக்குழுவினரை நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.