Skip to main content
Breaking News
Breaking

“விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை” - சர்ச்சைக்கு மோகினி டே முற்றுப்புள்ளி

Published on 26/11/2024 | Edited on 26/11/2024
Mohini Dey about ar rahman rumours regards his separation with saira banu

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் 1995அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 30ஆண்டுகளை நெருங்கும் வேளையில், சாய்ரா பானு ஏ.ஆர் ரஹ்மானை பிரிவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாக அவர் தெரிவித்திருந்தார். இவரது முடிவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பின்பு ஏ.ஆர் ரஹ்மானும், “எங்களது திருமண பந்தம் 30 வயதை எட்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக சென்றுவிட்டது” என தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். இவர்களுக்கு கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக பணியாற்றிய மோகினி டே என்பவர் அவரது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதனால் ஏ.ஆர் ரஹ்மான் பிரிவையும் இவரது பிரிவையும் தொடர்ப்பு படுத்தி பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர், அதற்கும் இதற்கும் எந்த சம்மதமும் இல்லை என விளக்கமளித்திருந்தார். இதையடுத்து ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீன், தனது தந்தை பிரிவு குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து ஏ.ஆர் ரஹ்மான் தரப்பில் உண்மைக்கு புறம்பான கட்டுரைகள், கற்பனையில் அளித்த பேட்டிகள் அனைத்தையும் நீக்கக் கோரி சம்பந்தப்பட்ட யூட்யூப் பதிவர்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. மேலும் அதை நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாய்ரா பானு, ரஹ்மான் உலகத்திலேயே சிறந்த மனிதர் என ஆடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பேஸ் கிட்டாரிஸ்டாஸ்ட் மோகினி டே இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த வீடியோவில், “ஏ.ஆர் ரஹ்மானுடன் எட்டரை ஆண்டுகள் பேஸிஸ்ட்டாக வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் ஐந்து வருடதுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டேன். அவர் அமெரிக்காவில் பல பாடகர்களுடன் நட்பில் இருக்கிறார். பிரிவு என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அவர் எனக்கு தந்தை போன்று. அவர் என் அப்பாவை விட சற்று வயது குறைந்தவர் தான். அவர் மகளுக்கும், எனக்கும் ஒரே வயது என்று நினைக்கிறேன்.” என்றார். 

மேலும் வீடியோவிற்கு கீழ் குறிப்பிட்டுள்ள பதிவில், “எனக்கும், ஏஆர் ரஹ்மானுக்கும் எதிராக அடிப்படையே இல்லாத தவறான தகவல்கள் வெளியாவதை என்னால் நம்பவே இயலவில்லை. நான் எனது சிறு வயதிலிருந்தே ரஹ்மானின் படங்கள், அவரது இசை கச்சேரிகளில் பணியாற்றியுள்ளேன். அந்த எட்டரை ஆண்டு பயணத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இது போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் மக்களுக்கு எந்த மரியாதையும், அனுதாபமும் அல்லது பச்சாதாபமும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இரண்டு நிகழ்வுகளையும் ஊடகங்கள் கொச்சைப்படுத்தியது குற்றம். ரஹ்மான் ஒரு லெஜண்ட். அவர் எனக்குத் தந்தையைப் போன்றவர். என் வாழ்கையில் நிறைய ரோல் மாடல்கள், தந்தைக்கு நிகரான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனது கரியரில் என் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மீடியாக்கள் ஒரு செய்தியால் அவர்களின் வாழ்க்கை மக்கள் மனதில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என புரிந்து கொள்வதில்லை. நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohini Dey (@dey_bass)

சார்ந்த செய்திகள்