![cndfh](http://image.nakkheeran.in/cdn/farfuture/W67HkbYLV_1A6jMFqQ5Sngmp1E4AlHvhhWFk5VXagcE/1591332544/sites/default/files/inline-images/meera_6.jpg)
எஸ்.ஜே. சூர்யா படங்களான 'அன்பே ஆருயிரே' மற்றும் 'இசை' பட நாயகியான நிலா என்கிற நடிகை மீரா சோப்ரா இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடி வருகிறார். இந்த உரையாடலின் போது, "ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, எனக்கு அவர் யார் எனத் தெரியாது மற்றும் நான் அவருடைய ரசிகை அல்ல” என்று முடித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, ‘அவருடைய படங்களைப் பார்த்தால் ரசிகையாக மாறிவிடுவீர்கள்’ என்று மற்றொருவர் தெரிவிக்க அதற்கு, ‘மிக்க நன்றி ஆனால் ஆர்வமாக இல்லை’ என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்.
இதனை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை திட்டி பதிவிட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து ஜூனியர் என்.டி.ஆரை டேக் செய்து, "இதுமாதிரி ரசிகர்களைச் சம்பாதித்தில் என்ன வெற்றி கண்டீர்கள்? என்னுடைய பதிவிற்குப் பதிலளிக்காமல் இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மீரா தன்னை மிரட்டும், அசிங்கமாகப் பதிவிடுபவர்களின் பதிவுகள் குறித்து ட்விட்டரில் கருது தெரிவித்துள்ளார். அதில்...
''நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். என்னை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் வாழ்க்கையற்றவர்கள். கரோனாவால் ஒரு பெரிய நெருக்கடி உள்ள இந்தச் சமயத்தில் உலகம் முழுவதும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் உங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தின் ரசிகை அல்ல என்ற காரணத்தால் நீங்கள் துஷ்பிரயோகம் செய்வதிலும், அச்சுறுத்துவதிலும் என்னை வைத்து சிறிய மகிழ்ச்சியைப் பெறுகிறீர்கள். போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்!'' எனப் பதிவிட்டுள்ளார்.