மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன், விரைவில் தொடங்கப்பட இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
![maniratnam](http://image.nakkheeran.in/cdn/farfuture/wdEaPZ7RjJSsskEioAFP3Gq-G4s08eW-kNp7hqM_tDw/1552665020/sites/default/files/inline-images/maniratnam.jpg)
காற்று வெளியிடை படம் எடுப்பதற்கு முன்பே மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க விரும்பினார். அந்த படத்தில் விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த படம் படபிடிப்பு வரை செல்லாமலே போனது.
தற்போது இந்த படத்தை தொடங்கிவிடும் முனைப்பில் மணிரத்னம் இருப்பதால் முக்கிய கதாபாத்திரங்களில் எந்த நடிகர்களை நடிக்க வைப்பது என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம். வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விஜய் சேதுபதியிடம் முதலில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. விஜய் சேதுபதிக்கு ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி நடிக்க இருந்த வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது கார்த்தி நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.