!['K.Balachandar Road' - Letter to Chief Minister on behalf of Tamil Film Producers Association](http://image.nakkheeran.in/cdn/farfuture/eLUHOkrXZ2snLu_yW2i85r4znIH29teZLsjrNpdskGA/1657720937/sites/default/files/inline-images/109_14.jpg)
தமிழ் சினிமாவில் 'இயக்குநர் சிகரம்' என போற்றப்பட்டவர் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர். தன் படங்களில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூக பிரச்சனை குறித்து பல்வேறு நிகழ்வுகளை பேசி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி மறைந்தார். இதனையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் அலுவலகத்தில் பாலச்சந்தருக்கு மார்பளவு சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமி, பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மைலாப்பூர் தொகுதியில் ஏதாவது ஒரு பூங்காவில் பாலச்சந்தரின் திருவுருவ சிலையை நிறுவவும், அவர் வாழ்ந்த மைலாப்பூர் பகுதியில் ஏதாவது ஒரு சாலைக்கு 'கே.பாலசந்தர் சாலை' என பெயர் சூட்டவும் பரிந்துரை கடிதம் எழுதியுள்ளனர். மேலும் இதே கோரிக்கையை கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் 'கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்' சார்பாக அவர்களும் கையெழுத்திட்டு கடிதமாக எழுதியுள்ளனர். இந்த பரிந்துரை கடிதத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கையாக கொடுக்க வேண்டும் என கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபுவிடமும், பி.பழனியிடமும் கடிதங்களை கொடுத்துள்ளனர். உடன் ஒளிப்பதிவாளர் விக்ரமன் இருந்துள்ளார்.