Skip to main content
Breaking News
Breaking

''பாட்ஷா படத்தில் ரஜினியை ஏன் கட்டிவைத்து அடித்தேன் தெரியுமா..?'' - ஆனந்த் ராஜ் சொன்ன சீக்ரெட்   

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

தன் இரண்டாவது இன்னிங்சை சிறப்பாக செய்துவரும் நடிகர் ஆனந்த் ராஜ் தற்போது வெளியாகும் பல படங்களில் காமெடி வில்லன் வேடம் ஏற்று கலக்கிக்கொண்டிருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த காட்சி குறித்து மனம் திறந்துள்ளார். அதில்...

 

anandraj

 

 

''ரஜினி சார் என்னை கூப்பிட்டு பாட்ஷா படத்தில் ஒரு சிறிய வேடம் இருக்கிறது செய்கிறீர்களா என்று கேட்டார். அந்த சமயம் பாட்ஷா படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்து இன்னும் 5 முதல் 10 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவடையம் நிலையில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ரகுவரன், சரண்ராஜ், தேவா போன்ற வில்லன்கள் ஏற்கனவே வேறு நடிகிறார்களே சார் என ரஜினியிடம் கேட்டேன். அதற்கு அவர் ஒரு சின்ன கேரக்டர் தான் நீங்கள் என்னை படத்தில் கட்டிவைத்து அடிக்கவேண்டும் என்றார். நான் அதை கேட்டவுடன் மறுத்துவிட்டேன். ஆனால் அவரோ நீங்க செய்தால்தான் சரியாகவும், ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருக்கும் என்றார். நானும் மறக்கமுடியாமல் அந்த அன்புக்கட்டளையை ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.  

 

சார்ந்த செய்திகள்