ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139.99 அடியாக நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து திடீரென திறக்கப்பட்ட நீரும்தான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் அணையின் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பான வாதத்தில் தற்போது இருக்கும் நீர்மட்டத்திலேயே அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139.99 அடியாகவே நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடிதம் மூலம் முன் வைத்திருந்தார். ஆனால் அணையின் உயரத்தை குறைக்கவாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்திருந்ததது குறிப்படத்தக்கது.