Skip to main content

“அதை நெருப்பில் பொசுக்கிவிடுவேன்...”- பிரபல இயக்குனர் ஆவேசம்!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

justice league

 

டிசி காம்ஸின் சினிமா யுனிவர்ஸில் ஒரு படமான 'ஜஸ்டிஸ் லீக்' கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. மார்வெல் காமிக்ஸில் எப்படி அனைத்து சூப்பர் ஹீரோக்களும் இணைந்து உலகைக் காப்பாறுகிறார்களோ, அதேபோல டிசி காமிக்ஸில் அனைத்து ஹீரோக்களும் சேருவது இந்தப் படத்தில்தான். 

 

'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸேக் ஸ்னைடர், 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின்போது அவரது மகள் தற்கொலை செய்துகொண்டதால் ஸ்னைடரால் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

 

இப்படத்தில் அடிஷனல் காட்சிகளைச் சேர்க்க ஏற்கனவே இயக்குனர் ஜாஸ் வீடன் உதவியை நாடியிருந்தார் ஜாக். அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கியவர்தான் இந்த ஜாஸ் வீடன். இவரை வைத்தே வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது. 


ஆனால், வெளியான படம், அசல் இயக்குனர் ஸாக் ஸ்னைடரின் பார்வையிலிருந்து விலகி விட்டதாகவும், ஸ்னைடர் எடுத்துமுடித்த பதிப்பை வார்னர் பிரதர்ஸ் வெளியிட வேண்டும் எனவும் இரண்டு வருடங்களாக ரசிகர்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஸ்னைடர் எடுத்த 'ஜஸ்டிஸ் லீக்' படம் ஓடிடியில் வெளியாகும் என்று வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் பழைய ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் எந்தவொரு காட்சியும் புதிய ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தில் இடம்பெறாது என்று ஜாக் ஸ்னைடர் தெரிவித்துள்ளார். இதுதொட்ரபாக அவர் அளித்த பேட்டியில், “நான் விலகுவதற்கு முன்போ அல்லது பின்போ எடுக்கப்பட்ட எந்தவொரு காட்சியும் இப்படத்தில் பயன்படுத்தப்படாது. நான் எடுக்காத ஒரு காட்சியை என் படத்தில் பயன்படுத்துவதற்குள் நான் அதை அழித்துவிடுவேன். அதை நெருப்பில் பொசுக்கிவிடுவேன். இதுதான் உண்மை.

 

திரையரங்கில் வெளியான அந்தப் படத்தின் ஒரு காட்சியை என் படம் உங்களுக்கு நினைவூட்டினாலும் இதை நான் கைவிட்டுவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்