தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தை ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் பார்வையிட்டார். அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது,
![d](http://image.nakkheeran.in/cdn/farfuture/sJSd0ai4kvzeachG3ZXM17G7_6d_faQmjLJphYijGOY/1558280405/sites/default/files/inline-images/dmk_51.jpg)
ஓ.பி.எஸ் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகின்றது. ஆனால் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது. திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த மறு வாக்குப்பதிவினால் எங்களுக்குத்தான் கூடுதலான வாக்குகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
![d](http://image.nakkheeran.in/cdn/farfuture/loBBV3cDZTL-T703z2QVlHN-tGwLroS8kAesbP51c6M/1558280424/sites/default/files/inline-images/dmk1_12.jpg)
மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார். வருகின்ற ஜீன் 3ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக அமருவார். அதனால் இப்போதே போலீஸ் பிடியில் தப்புவதற்கு மோடி குகையைத் தேடி அமர்ந்து விட்டார். அது போல ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஓடி, ஒழிந்து கொள்ள குகையை தேடி வருகின்றனர். இவர்களுக்கு எந்த குகையும் கிடைக்கப் போவதில்லை என்று கமெண்ட் அடித்தார்.