Published on 05/04/2020 | Edited on 05/04/2020
பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏப்ரல் 8- ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமரிடம் ஸ்டாலின் கூறினார்.

மேலும் நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கப்பூர்வ ஆலோசனையை மத்திய அரசுக்கு திமுக தரும் எனவும், மத்திய அரசு ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, அரசு கவனமாக செயல்பட்டு வருவதாக கூறியதுடன் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் பற்றியும் கேட்டறிந்தார்.