
தமிழக பாஜகவின் மாஜி தலைவர் மிக சீக்ரெட்டாக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். மனைவியுடன் கோடை விடுமுறையை கழிப்பதற்கு சென்றுள்ள அவர், நேற்று சிங்கப்பூரிலுள்ள செந்தோசா தீவுக்கு சென்றிருக்கிறார். இந்த பயண விபரம் குறித்து தமிழக பாஜக தலைவர்கள் யாருக்கும் அவர் தெரிவிக்கவில்லை. கடந்த 2 நாட்களாக, அவர் எங்கே இருக்கிறார்? என்று அவரது ஆதரவாளர்கள் தேடியிருக்கின்றனர். ஆனால், யாருக்கும் எந்த விபரமும் தெரியவில்லை.
மாநில உளவுத்துறைக்கும் இது தெரிந்திருக்கவில்லை. மாநில பதவிப் பறிக்கப்பட்டதற்கு பிறகு, அவரை ஃபாலோ பண்றதையும் உளவுத்துறை விலகி விட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால், தமிழக பாஜக தலைவர்களின் நடவடிக்கைகளை மத்திய உளவுத்துறை கண்காணித்தபடி இருப்பதால் அவர்களுக்கு மட்டும் அவர் சிங்கப்பூர் தீவுக்கு சென்றிருப்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். எதற்காக இந்த பயணம் ? என்பது குறித்து விசாரித்துள்ளனர். சொத்துக்களை வாங்கிக் குவிப்பதாக மாஜி மீது பாஜகவினரே சமீபகாலமாக குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் சூழலில், சிங்கப்பூர் தீவில் ஏதேனும் சொத்து வாக்கியிருக்கிறாரா? என்ற கோணத்தில் உளவுத்துறையினர் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் கோடை விடுமுறைக்காக குடும்பத்தினருடன் அண்மையில் ஊட்டி சென்றிருந்தார். அரசின் ப்ரோட்டகால் படி, தனது ஊட்டி பயணத்தை முறைப்படி தமிழக மக்களுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் ஊட்டிக்கு சென்றார். ஆனால், அந்த பயணத்தையே தமிழக பாஜக மாஜி தலைவர் விமரிச்சித்திருந்த நிலையில் அவர், தனது சிங்கப்பூர் பயணத்தை மக்கள் அறியும் வகையில் தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கலாமே ? எதற்கு இந்த சீக்ரெட் சிங்கப்பூர் ட்ரிப்? என்கிற கேள்வியை எழுப்புகின்றனர் எதிர் தரப்பினர்.