sub

பத்து லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கு பான் எண் அளித்தால் மட்டுமே பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 10 லட்சத்திற்கு மேல் அசையா சொத்துக்களை வாங்குபவர், விற்பவர் பான் எண்ணை அளிக்க வேண்டும் என்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், ஆவணப்பதிவுன் போது விற்பவன், வாங்குபவர் அளித்த பான் எண் போலியானவை என தெரியவந்தால் பத்திரம் பதியக்கூடாது என்றும் பதிவுத்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.