
ஜெமினி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி குறிப்பிட்ட காலம் வரை பிரபல கதாநாயகியாக வலம் வந்தார் கிரண். பின்பு பட வாய்ப்புகள் குறையத் துணை மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்பு அந்த பட வாய்ப்புகளும் பெரிதாவ அமையாததால் நடிக்காமலே இருந்து வந்தார். ஆனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார். தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் தன்னுடன் ஆடியோ கால், வீடியோ கால் மற்றும் டேட்டிங் செய்யலாம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதற்காக சில கட்டணங்களையும் அவர் நிர்ணயித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கினார். கிரணின் இந்த செயல் விமர்சனத்துக்குள் உள்ளாக்கப்பட்டது.
இந்த நிலையில் கிரண், தன்னுடைய போலி ஆபாச வீடியோ பரப்பப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “எனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் என் பிரைவஸிக்கு பாதுகாப்பு இல்லாமலும் டிஜிட்டல் முறையில் மார்ஃபிங்க் செய்யப்பட்ட வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளேன். அதனடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அது போன்ற ஒரு வீடியோவை உண்மையா இல்லையா என தெரியாமல் பகிர்வது அல்லது பதிவிறக்கம் செய்வது சட்டப்படி குற்றமாகும். தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். அந்த வீடியோவை ரிப்போர்ட் செய்யுங்கள், ரீ-போஸ்ட் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் கேப்ஷனில், மார்ஃபிங் வீடியோக்களின் ஆபத்து குறித்து தொடர்ந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோம் என கேட்டுக் கொண்டுள்ளார்.