Published on 25/05/2025 | Edited on 25/05/2025

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெற்ற தாயை மகனே கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மலைக்கிரமான பெட்டமுகிலாலம் பகுதியில் மது போதையில் பெற்ற தாயையே ஒரு நபர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தாயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கொலை செய்த நபர் மலைப் பகுதியில் உள்ள உயர்ந்த மரத்தில் ஏறி அமர்ந்த நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.