![wonder woman](http://image.nakkheeran.in/cdn/farfuture/_wil9kl7j-TYooqjtHnXf6ykWc0aDgovqznqpNQNBE0/1599902716/sites/default/files/inline-images/wonder-women.jpg)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் வெளியாக இருந்த புதிய படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வரிசையில் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு, திரையரங்கம் திறக்கப்பட்ட நாடுகளில் டெனட் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிசி காமிக்ஸின் 'வொண்டர் வுமன் 1984' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகுவதாக இருந்தது. அதன்பின் இரண்டு முறை ரிலீஸ் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.
இதுகுறித்து வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டோபி எம்மரிச் கூறுகையில், “பேட்டி ஜென்கின்ஸ் ஒரு அபாரமான இயக்குனர். 'வொண்டர் வுமன் 1984' மூலம் உலகம் முழுக்க உள்ள அனைத்து வயதையும் சார்ந்த திரைப்பட விரும்பிகளும் ரசிக்கும் ஒரு அற்புதமான படைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இப்படம் குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.