இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை மதுரை காமராசர் பல்கலைகழக துனைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளது பல்கலை கழக வளாகத்தில் பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கும் பாலியல் குற்றச்சாட்டு, துணைவேந்தர் செல்லத்துரை நீக்கம் என பல்வேறு குளறுபடிகளால் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பில் இருக்கும் பல்கலைக்கழகம் தற்போது புதிய துணை வேந்தர் தேடுதல் குழுவிற்கு இதுவரை196 பேர் துணை வேந்தர் பதவிக்கு விண்ணபித்துள்ளார்கள். இதன் கடைசி நாள் கடந்த வெள்ளியோடு முடிவுக்கு வர அதில் கடைசியாக துணை வேந்தர் பதவிக்கு இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விண்ணபித்தது பலரையும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் நம்மிடம், " இப்பவாவது நல்ல காலம் பிறக்கட்டும். சீரழிந்து கிடக்கும் பல்கலை கழத்திற்கு விடிவுகாலம் பிறக்கட்டும். தகுதி இல்லாத நபர்கள் பணத்தை கொடுத்து வந்து கல்வியை சீரழித்தது போதும். இப்போதாவது சரியான நபர்கள் வரட்டும் . இதிலும் சாதி,பணம் அதிகாரம், எதுவும் பார்காமல் நேர்மையாக தேர்வு நடைபெற்று அடுத்த தலைமுறைகளையாவது காப்பாற்றுங்கள்.
நிர்மலாதேவி போன்றோர் உருவாகுவதற்கு தகுதி இல்லாதவர்கள் துணை வேந்தர் போன்ற உயர் பதவிகளில் வருவதால்தால் இதுபோல் அசிங்கமானதெல்லாம் நடக்கிறது என்று குறைபட்டு கொண்டார்... மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் துணைவேந்தராக வருவது மற்ற பேராசிரியர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றார்.