Skip to main content

தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை அறிய வேண்டுமா ?

Published on 03/05/2019 | Edited on 03/05/2019


தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும் கல்வி கட்டணத்தை தமிழக அரசு சார்பில் நிர்ணயிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வரும் வசதிகள் உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு கல்வி கட்டண நிர்ணயக்குழு கட்டணத்தை நிர்ணயிக்கிறது.  

 

TN PRIVATE MATRICULATION SCHOOLS

 

அதனை தொடர்ந்து LKG வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் கல்வி கட்டணத்தை இந்த நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. மேலும் குழந்தைகளை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை எவ்வாறு அறிவது ? என்பது தொடர்பான குழப்பத்துடனே ஒவ்வொரு ஆண்டும் தங்களின் குழந்தைகளுக்காக மெட்ரிக் பள்ளிகளில் கட்டணத்தைச் செலுத்துக்கின்றனர். தமிழக அரசு நிர்ணயித்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை எளிதாக இணையதள வழியில் அறியலாம் . இதற்கான இணையதள முகவரி : http://tnschools.gov.in/ மற்றும் http://tnschools.gov.in/fee_com ஆகும்.  இந்த இணையதளத்திற்கு சென்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் மெட்ரிக் பள்ளிக்களில் எவ்வளவு ரூபாய் அரசு கல்வி கட்டணமாக நிர்ணயித்துள்ளது என்பதை அறியலாம் . அதே போல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறையிடம் அல்லது கல்வி கட்டண நிர்ணயக்குழுவிடம் புகார் அளிக்கலாம் என தமிழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்