Skip to main content

“ஜனாதிபதியை ராகுல் காந்தி அவமரியாதை செய்கிறார்” - பா.ஜ.க குற்றச்சாட்டு

Published on 26/11/2024 | Edited on 26/11/2024
BJP alleges Rahul Gandhi is disrespecting the President

நாடு முழுவதும் இன்று (26-11-24) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட 75வது ஆண்டு ஆகும். எனவே, இந்த நாளை கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு கொண்டாடுகிறது. 

இதனை முன்னிட்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டார். அதன் பிறகு, அரசியல் சாசனத்தின் முன்னுரை வாசிக்கப்பட்டது. மேலும், சமஸ்கிருதம் மற்றும் மைதிலி மொழிகளில் அரசியல் சாசனத்தின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த நிலையில், இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அவமரியாதை செய்துவிட்டார் என பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் அமித் மாளவியா, இது தொடர்பாக இரண்டு வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், விழாவில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது ராகுல் காந்தி கீழ்நோக்கி அங்கும் இங்கும் கண்ணை அசைத்துக் கொண்டிருப்பதை காண்பித்திருந்தது. மற்றொரு வீடியோவில், தேசிய கீதம் முடிந்த பின்னர் அனைத்த தலைவர்களும் குடியரசுத் தலைவர்களிடம் வாழ்த்து தெரிவித்த போது, ராகுல் காந்தி மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் மேடையை விட்டி கீழே இறங்குவதை காண்பித்தது. 

இந்த வீடியோக்களை பதிவிட்ட அமித் மாளவியா கூறியதாவது, “ராகுல் காந்தியால் 50 வினாடிகள் கூட தனது கவனத்தை வைத்திருக்க முடியாது. அமெரிக்க ஜனாதிபதியைப் பற்றி முற்றிலும் கேவலமான கருத்தை வெளியிடும் துணிச்சல் அவருக்கு இருந்தது. காங்கிரஸ் எப்பொழுதும் ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவமதிக்கிறது. ஏனென்றால் இந்தியாவில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியின பெண் அவர். ராகுல் காந்தி மற்றும் குடும்பத்தினர் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட களை வெறுக்கிறார்கள். அது காட்டுகிறது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்