Published on 03/12/2021 | Edited on 03/12/2021

பஞ்சாயத்து அலுவலகத்தில் திடீரென புகுந்த ஆடு ஒன்று அங்கு வைத்திருந்த ஆவணத்தை வாயால் கவ்விக் கடித்து எடுத்துச் சென்ற நிலையில் இதனைக் கண்ட அரசு ஊழியர் ஆட்டின் பின்னாலேயே துரத்திக்கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கவுபேபர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த ஆடு அங்கு ஒரு அறையில் வைத்திருந்த ஆவணத்தை வாயால் கடித்து எடுத்தது. இதனைக்கண்ட ஊழியர் ஆட்டை பிடிக்க முற்பட்டார். ஆனால் துள்ளோடிய ஆடு அலுவலகத்தை விட்டு வெளியே சென்றது. இதனால் அதிர்ந்த ஊழியர் அந்த ஆட்டை துரத்திக்கொண்டு ஓடினார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.