Published on 08/03/2025 | Edited on 08/03/2025

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் மக்களுக்காக குறை தீர்க்கும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் பெட்டியில் தொகுதியில் உள்ள பொது பிரச்சனைகள் எதுவாயினும் இந்த புகார் பெட்டியில் எழுதி போடலாம் என்றும், அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த பகுதியிலுள்ள சமூக சேவகர் சசிபாலன் உறுதியளித்துள்ளார். இந்த நிகழ்வில் உழவர்கரை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் பெரும்பான்மையான மக்கள் கலந்து கொண்டனர்.