Published on 08/03/2025 | Edited on 08/03/2025

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், 2026-ல் திமுகவை அகற்றுவோம் என்று விஜய் பேசியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “அய்யய்யோ. அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்” என்றார். மேகதாது அணை குறித்து பேசி அமைச்சர்கள் துரைமுருகன், “தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும் மேகதாது அணையை அவர்களால் கட்ட முடியாது” என்றார்.