new cabinet  ministers pm narendra modi wishes

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவைப் பதவியேற்றுக் கொண்டது. இதில் ஹர்தீப்சிங் புரி, கிஷன் ரெட்டி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் உள்ளிட்ட 28 பேர் மத்திய இணையமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisment

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதுடன் வளர்ச்சி, வலுவான இந்தியாவை உருவாக்கப் பணியாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதனிடையே, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (08/07/2021) மாலை 05.00 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பிரதமர் தலைமையில் நாளை இரவு 07.00 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது.