Published on 25/05/2025 | Edited on 25/05/2025

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகைக்கு ஆறாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பாகவே சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.