தமிழகத்தில் நேற்று மேலும் 526 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 526 பேரில் சென்னையில் மட்டும் 279 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் மொத்தம் 3,330 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளருக்கு (எழுத்தருக்கு) கரோனா உறுதியானதை அடுத்து மருத்துவமனையானது மூடப்பட்டது. பூந்தமல்லி நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த மருத்துவமனையானது மூடப்பட்டுள்ளது.
அதேபோல் திருவண்ணாமலையிலும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 10 பேருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்டோருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கோடம்பாக்கத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் அதேபோல் சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் சென்னை மண்டலத்தில் கோடம்பாக்கம் மீண்டும் கரோனா பாதிப்புடைய இடத்தில் முதலிடத்தில் உள்ளது.