Skip to main content

பேருந்துகளின் ஆயுட்காலத்தை நீட்டித்து அரசாணை!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

Govt extends life of buses

 

அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

அரசு பேருந்துகள், அரசு விரைவுப் பேருந்துகளில் ஆயுட்காலம் என்பது தமிழ்நாடு அரசால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஆயுட்காலமானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என இருந்த அரசு பேருந்துகளின் ஆயுட்காலம், ஒன்பது ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மூன்று ஆண்டுகள் அல்லது  7 லட்சம் கிலோ மீட்டர் என இருந்த அரசு விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் அல்லது 12 கிலோமீட்டர் என உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்