கரோனா ஊரடங்களால் கடந்த 43 நாட்களாக இன்றைக்கு திறக்கும், நாளைக்கு திறக்கும் என்று வீட்டுக்குள்ளே நம்பிக்கையோடு இருந்த டாஸ்மாக் குடிமகன்களின் பொிய எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் விதமாக இன்று சென்னை நீங்கலாக தமிழகம் முமுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கபட்டது. கடை திறக்கபட்டதோடு குடிமகன்களுக்கு சில கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டது.
இதையொட்டி சமூக இடைவெளி விட்டு வாிசையாக சென்று குடிமகன்கள் மது பாட்டில் வாங்கி செல்லும் விதமாக கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும் கூட்டத்தை தவிா்க்க ஆதாா் அட்டையை காட்டிதான் மதுவை வாங்கும் முறையை பின்பற்றியதால் குடிமகன்கள் வீட்டில் வைத்தியிருந்த ஆதாா் அட்டையை தேடிக் கண்டு பிடித்து காலையில் முதல் வாிசை பிடித்து காத்திருந்தனா்.
இதில் பல கடைகளின் வாிசையில் தந்தையின் பின்னால் மகனும், அண்ணனின் பின்னால் தம்பியும் நின்று கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. இந்த நிலையில் திடீரென்று குமாி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கன மழையையும் பொருட்படுத்தாமல் அதில் நனைந்தபடியே மது பாட்டில்களை குடிமகன்கள் உற்சாகத்துடன் வாங்கி சென்றனா்.
ஒண்ணரை மாத காலம் ஏக்கத்தை ஓரே நாளில் தீா்த்து கொள்ளும் விதமாக மடி நிறையவும், பை நிறையவும் குடி மகன்கள் வாங்கி சென்றதை பாா்த்து அவா்களிடம் கேட்ட போது கரோனா உச்சத்தை தொட்டு கொண்டியிருக்கும் நிலையில் நாளைக்கு என்ன நடக்குமோ? திடீரென்று அரசு டாஸ்மாக்கை பூட்டினாலும் பூட்டும் அதுனால தான் இந்த முன்னேற்பாடு என்றனா்.
ரேசன் கடைக்கு குடும்ப அட்டையை எடுத்து கொண்டு வாிசையில் நிற்காத குடும்ப அங்கத்தினா்கள் தங்களுடைய சுய இன்பத்துக்காக வாிசையில் காத்து நிற்கிறாா்கள்.