Skip to main content

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Farmers bill issue at thiruvarur

 

விவசாயிகளுக்கு எதிராக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என தமிழகம் முழுவதும் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அந்தவகையில், டெல்டா மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஒன்றியம், நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

 

திருவாரூர் மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், “ 'இன்றியமையா பொருட்கள் திருத்தச் சட்டம் 2020', 'வேளாண் விளைபொருள் விற்பனை மற்றும் வணிக மேம்பாடு எளிமைப்படுத்தும் சட்டம் 2020', மற்றும் 'உழவர்களுக்கான விலை உறுதி மற்றும் பன்னை சேவை ஒப்பந்தச் சட்டம் 2020' ஆகிய மூன்று சட்டங்களையும் உடனே திரும்பப்பெறு. பாராளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக சட்டங்கள் நிறைவேற்றிய மக்கள் விரோத மத்திய மாநில அரசே உடனே பதிவி விலகு” என முழக்கமிட்டனர். 

 

மேலும், வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்