Skip to main content

செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
 Seizure of artificially ripened fruits!

கோடைகாலம் தொடங்கியபோதே மாம்பழ சீசன் தொடங்கியது. இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதுமே மாம்பழ விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் விற்பனைக்கான வரத்து போதிய அளவில் இல்லை என்பதால் இந்த ஆண்டு மாம்பழங்களின் விலை கணிசமாகவே உயர்ந்துள்ளது, இது மாம்பழ விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளன.

அதே நேரத்தில் விவசாயிகளிடமிருந்து மாம்பழம், மாங்காய்களை வாங்கும் விற்பனையாளர்கள் அதனை பழுக்க வைப்பதற்காக ரசாயன பொடிகளை தூவி பழுக்க வைக்கின்றனர். இது உடல் நலத்திற்கு தீங்கு என சுகாதாரத்துறை உணவு கட்டுப்பாட்டு துறை எச்சரித்தாலும் பணமே குறிக்கோள் என செயல்படும் வியாபாரிகள் பலர் அதனை கண்டு கொள்வதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மாம்பழம் விற்பனைக்கு வருகின்றன. திருவண்ணாமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர், அவர்கள் இங்கிருந்து வீட்டுக்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக மாம்பழம், வாழைப்பழம் உட்பட ஏதாவது ஒரு பழம், தின்பண்டங்களை வாங்கிச் செல்கின்றனர். அப்படி வாங்கிச் செல்வது தரமற்றதாகவும் கெமிக்கல் பயன்படுத்துவதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையிலிருந்து வாங்கிச் செல்லப்படும் மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றில் ரசாயனம் தூவி பழுக்க வைக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று திடீரென பழக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

Seizure of artificially ripened fruits!

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பழக் கடைகள், மண்டிகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பழக்கடைகளில் ரசாயன பொருட்களை தெளித்தும், ரசாயன பொருட்களை சிறுசிறு கட்டிகளாக வைத்தும் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுவது உறுதியானது.

கடைகளில் இருந்து சுமார் 500 கிலோ மாம்பழம் மற்றும் 500 கிலோ வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இந்த தவறுகளை செய்த பழக்கடை உரிமையாளர்களில் மீது அபராதமும் விதிக்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோல் திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டல்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை வைக்கின்றனர். இதுக்குறித்து பல தரப்பிலிருந்து உணவுத்துறைக்கு கோரிக்கை வைத்தும் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனை; லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கா நல்லூர் கிராமம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தன்னுடைய தாயார் கண்ணம்மாள் பெயரில் சொத்து மதிப்பு சான்று பெற்று அரசு ஒப்பந்த டெண்டர்களை எடுத்து செய்து வருகிறார்.

இவர் சொத்து மதிப்பு சான்று பெற ரூபாய் 20 லட்சத்திற்கு அரசிற்கு செலுத்த வேண்டிய 7900 ரூபாய் வங்கியின் மூலமாய் காசோலை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியரின் பரிந்துரை பெற்று கடந்த 13.6.2024 ஆம் தேதி ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா அணுகி தந்துள்ளார்.

அவர் ரூ.20 லட்சம் சொத்து மதிப்பீடு சான்று பெற இரண்டு சதவிதம் ரூ,20,000 லஞ்சமாக கேட்டு உள்ளார். பின்னர் அவரிடம் அவ்வளவு தொகை இல்லை என்று சொல்லவே குறைந்தது ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் மட்டுமே என்னால் சான்று வழங்க முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டார். அவர் மிக மோசமாக பேசியதால் மனம் உடைந்த சீனிவாசன் வேறு வழி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திருவேல் முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் மைதிலி, உதவி ஆய்வாளர். கோபிநாத் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் ஜூன் 14ஆம் தேதி மாலை ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் சென்று அணுகிய போது கொண்டு வந்த லஞ்சப் பணத்தை இரவு காவலர் பாபு என்பவரிடம் கொடுக்க சொல்ல ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜிலன்ஸ் டிஎஸ்பி திருவேல் முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் மைதிலி கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் மஞ்சுளா லஞ்சம் வாங்கச்சொன்னது உண்மை எனத் தெரியவந்து தாசில்தாரும், இரவு காவலரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story

முதல்நாளே பள்ளி வேனில் தீ; உயிர் தப்பிய மாணவர்கள்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
School van fire on first day; Students who survived

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பபட்டுள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான இன்று திருவண்ணாமலையில் தனியார் பள்ளி வேனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்கள் உடனடியாக வேனிலிருந்து இறக்கி விடப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.