Skip to main content

திடீர் இடியுடன் கூடிய கனமழை; பரிதாபமாக பெண் பலி

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
woman grazing goats near Sholingur was struck by lightning and lost her life

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மக்களை  வாட்டி வதைத்து  வந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,  சோளிங்கர், ஆற்காடு, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது, இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திடீர் இடியுடன் கூடிய மழை காரணமாக சோளிங்கர் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தேவிகா என்ற பெண் இடி தாக்கி உயிர் இழந்தார். அதேபோல் சோளிங்கர் அருகே மருதாளம் பகுதியில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு இடி தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
 Alert for 13 districts in next 3 hours

ஏழு மணி வரை 13 மாவட்டங்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் மணலி, திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏழு மணி வரை 13 மாவட்டங்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராணிப்பேட்டை, நாமக்கல் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு ஏழு மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

இளம்பெண் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட கொடூரம்; விசாரணையில் பகீர்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
woman arrested for forcing young girl into wrong profession

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கரட்டடி பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் சத்யனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் கோபி அடுத்த கரட்டடி பாளையம், சஞ்சீவ் காந்தி வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட சென்றனர். 

அப்போது போலீசை பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த ஒரு ஆண் வெளியே தப்பி ஓடினார். பின்னர் போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 21 வயது மதிக்கத்தக்க பெண் பாலியல் தொழில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தப் பெண்ணை விசாரித்த போது சண்முக வடிவு(60) என்பவர் தன்னிடம் ஆசை வார்த்தை பேசி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறினார். போலீஸ் விசாரணையில் சண்முக வடிவு பெண் புரோக்கராக செயல்பட்டு இதேபோன்று பல பெண்களை பாலியல் தொழில் தள்ளியது தெரியவந்தது.

பின்னர் இருவரையும் போலீசார் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் அந்தப் பெண்தான் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த போது சண்முகவடிவுடன் அறிமுகம் ஆகி என்னிடம் ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார் என்று கூறினார். இதனையடுத்து சண்முகவடிவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உறவினர்களை வரவழைத்து அந்தப் பெண்ணுக்கு புத்திமதி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கோபி பகுதியில் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.