Skip to main content

“காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது” - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
“Low Pressure Area Formed” - Met Office Info

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மே 22 ஆம் தேதி (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக்கூடும்’ எனக் கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (22.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதாவது இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும். அதே சமயம் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி வராது என்றாலும் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும். இதனால் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் (23.05.2024) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னையில் பரவலாக மழை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
nn

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர், மதுரவாயில், போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதியில் பலத்த மழை பொழிந்து வருகிறது.

Next Story

அடுத்த 3 மணி நேரத்தில் மழை; 5 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
nn

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, திண்டுக்கல், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.