vadakkan movie censor board issue

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ராஜாபாட்டை உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி. மேலும் கதையாசிரியாக தொலைக்காட்சி தொடர்களிலும், அழகர் சாமியின் குதிரை படத்திலும் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது வடக்கன் என்ற தலைப்பில் கதை, வசனம் எழுதி அதை இயக்கியும் உள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Advertisment

இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மு.வேடியப்பன் தயாரித்துள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வழங்குகிறது. எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. மேலும் மே 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், ‘வடக்கன்’ என்ற தலைப்பை அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் படத்தின் தலைப்பை மாற்றி ரிலீஸையும் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.