தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியில் உள்ள குரங்கனி கொழுக்கு மலை வனப்பகுதியில் பரவிய காட்டு தீயால் ட்ரெக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் அந்த காட்டு தீயில் சிக்கியதில் 12 பேர் உடல் கருகி இறந்தனர். 15-க்கு மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். இந்த நிலையில் தீவிபத்து குறித்து வருவாய் துறை செயலர் அதுல்யா மிஷ்ராவை விசாரனை ஆணையராக இபிஎஸ்., ஒபிஎஸ் அரசு நியமித்து இருக்கிறது.
இந்த தீவிபத்து விசாரணையை வரும் 22 ம்தேதி மிஸ்ரா தொடங்க இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு சுற்றுலா பயணிகள் 12 பேரை ட்ரெக்கிங் கூட்டிகிட்டு வந்த கைடு பிரபு இந்த தீ விபத்தின் போது கூட்டிகிட்டு வந்த சுற்றுலா பயணிகளை பரிதவிக்க விட்டு ஓடிவிட்டார். இதுசம்பந்தமாக குரங்கணி போலீசார் கைடு பிரபு மீது வழக்கு போட்டனர். அதன் அடிப்படையில் பிரபுவை நேற்று இரவு கைது செய்து போடிக்கு கொண்டு வந்தனர். ஆனால் இரவு வெகுநேரம் ஆனதால் நீதிபதியிடம் ஆஜர் படுத்தாமல் இன்று போடி கோர்ட்டில் ஆஜர் படுத்தியதின் மூலம் பிரபுவை 15 நாள் காவலில் வைக்க உத்திரவிட்டார். அதைதொடர்ந்து பிரபுவை பெரியகுளம் சிறை சாலையில் போலீசார் அடைத்தனர்.