இஸ்லாமிய பெண்கள் குழுவாக இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் சிலர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை மசோதாவுக்கு தங்களது நன்றிகளை தெரிவிக்கும் வகையில் இந்த கோவிலை கட்டியெழுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவிற்கு தலைமை தாங்கும் ரூபி கஸ்னி இதுகுறித்து கூறுகையில், "இஸ்லாமிய பெண்களுக்காக பிரதமர் நிறைய செய்துள்ளார், மேலும் அவர் மதிக்கப்படுவதற்கு தகுதியானவர். முத்தலாக் மசோதா மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார் அவர். மோடிக்கு உலகம் முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்படும் நிலையில் நமது சொந்த நாட்டில் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்" என்று கூறினார்.