Skip to main content
Breaking News
Breaking

ஹர்டிக் படேல் தேர்தலில் போட்டியிடுவதில் நீடிக்கும் சிக்கல்...

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹர்டிக் படேல் தேர்தலில் போட்டியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

 

supreme court denies to take hardik patel plea as emergency

 

படேல் சமுதாய மக்களின் ஆதரவை பெற்ற ஹர்டிக் படேல் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹர்டிக் படேலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விஸ்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது ஜாமினில் உள்ள அவர் தன் மீதான தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில் ஹர்டிக் படேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஹர்டிக் படேல் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்