
அண்மையாகவே தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மாற்றும் தெரு நாய்கள் மக்களை கடித்து குதறும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அனுதினமும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை தெரு நாய்கள் கூட்டு சேர்ந்து கடித்துக் குதறும் திக் திக் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த காட்சியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்ற நிலையில், திடீரென அவரைத் தொடர்ந்து வந்த கூட்டமாக வந்து தெரு நாய்கள் அவரை கடித்து குதறியது.
இதனால் அலறி அடித்துக் கொண்டு அந்த பெண் நடு சாலையில் கீழே விழுந்த நிலையில், அவரை தெரு நாய்கள் தாறுமாறாக கடித்து குதறின. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் கையில் இருந்த டிபன் பாக்ஸால் அங்கிருந்து தெரு நாய்களை விரட்டி அடித்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.