அடுத்த மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியல்களை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானாவில், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி வரும் தேர்தலில் பாஜக சார்பில் விசாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இந்த தேர்தலில் அவரது கணவரான தக்குபாடி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
கணவன் மனைவி இருவரும் இதற்கு முன் தெலுங்குதேசம் கட்சியில் இருந்தனர். பிறகு ஒருசில அரசியல் காரணங்களால் அதிலிருந்து விலகிய புரந்தரேஸ்வரி பாஜக விலும், தக்குபாடி வெங்கடேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தனர். இந்நிலையில் தற்போது ஒரு குடும்பத்தை சார்ந்த கணவன் மனைவியான இருவர் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுவது அம்மாநில மக்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.