Skip to main content

ஒபாமாவுக்கு பிடித்த டாப் 10 படங்கள்; இடம்பெற்ற ஒரே இந்திய சினிமா

Published on 23/12/2024 | Edited on 23/12/2024
all we imagine as light tops barack obamas favourite films of 2024

2024ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டான 2025ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் 2024ஆம் ஆண்டு நடந்த சம்பவங்கள், நினைவுகள், பிடித்த படங்கள் என அத்தனையும் சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் அமெரிக்காவின் பராக் ஒபாமா இந்தாண்டு வெளியான படங்களில் தான் பார்த்து ரசித்த படங்களில் தனக்கு பிடித்த டாப் 10 படங்களை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ள பட்டியலில் ஒரு இந்திய படமும் இடம் பிடித்துள்ளது. மலையாளம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகியிருந்த ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) படம் அவர் வெளியிட்ட பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. 

all we imagine as light tops barack obamas favourite films of 2024

மலையாள நடிகைகள் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா மற்றும் இந்தி நடிகை சாயா கதம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கியிருந்தார். தாமஸ் ஹக்கீம், ஜூலியன் கிராஃப் இருவரும் தயாரித்துள்ள இந்தப் படம் கேரளாவிலிருந்து மும்பைக்குப் புலம்பெயர்ந்து வாழும் இரண்டு செவிலியர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.  

இப்படம் இந்தாண்டு நடந்த புகழ் பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, கிராண்ட் பிரிக்ஸ்(Grand Prix) என்ற பிரிவில் விருது வென்றது. இந்த விழாவில் பெருமை மிகு விருதாக பார்க்கப்படும் இந்த விருதை முதல் இந்திய படமாக இந்த படம் பெற்று பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் சில சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. இதையடுத்து தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்