கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, 8 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் விடுதலை அளித்து உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நபோலி பகுதியை சேர்ந்த வணிக ஆபரேட்டரான ரஞ்சீத்திடம், தங்கச் சங்கிலி மற்றும் மோதிரங்களை கொள்ளையடிப்பதற்காக அக்டோபர் 24, 2016 அன்று சில மர்ம நபர்கள் கத்தியால் குத்தி தாக்கினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர்மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் போலீசார், நந்து பாட்டீல் (36), ரோஹித் ரவி பாட்டீல் (35), பாப்பியா நாதுராம் ஷெலர் (33), அஜ்ஜு விஜய் ஜாதவ் (33), அபிஷேக் கங்காதர் நிம்போல்கர் (36), பப்லு சிவாஜி ஷெலர் (34), சச்சின் சோபன் வாட்கர் (44), ருஷிகேஷ் ராம்தாஸ் பாட்டீல் (34), பாரத் கந்து பாட்டீல் (36) மற்றும் ரூபேஷ் ராஜேஷ் கந்தகலே (46) ஆகிய 10 நபர்கள் மீது கொலை, மற்றும் கலவரம் என்ற பெயரில் கடுமையான சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமித் எம் ஷேட் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘வழக்கறிஞரும், சாட்சியங்களும், கொலை நடந்த உண்மையான காரணத்தை சொல்ல தவறிவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் முரண்பாடாக இருக்கிறது. அதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்’ என்று கூறி 10 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.