Skip to main content

'சடலமாக உடல்கள் மீட்பு; உள்ளே சிக்கியது எத்தனை பேரோ?'-மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பரபரப்பு

Published on 19/12/2024 | Edited on 19/12/2024
'Recovery of dead bodies; How many people are trapped inside?'-Commotion at Mettur Thermal Power Station

மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேரும் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் இயங்கி வரும் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. அதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாயமான இரண்டு பேர் தேடப்பட்டு வந்தனர்.

விபத்தால் சம்பந்தப்பட்ட பகுதியில் தீயுடன் அதிகப் புகை வெளிப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இருவர் உடல்களும் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிலக்கரிகளை தேக்கும் பங்கர் டேங்க் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தமாக அந்த இடத்தில் எட்டு பேர் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் நிலக்கரி குவியலுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் நடைபெற்று வருகிறது. முழுமையான மீட்புப்பணிகளுக்குப் பிறகே எத்தனை பேர் உள்ளே சிக்கி உள்ளனர் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் 840 மெகாவாட் அனல் மின்நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்