புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதியே உளவுத்துறையிடமிருந்து அரசுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அரசு கவன குறைவாக இருந்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல் நடத்தப்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும் 78 வாகனங்கள் ஒன்றாக அந்த இடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.