Published on 14/03/2020 | Edited on 14/03/2020
கரோனா வைரஸ் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. இந்தியாவிலும் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த வைரஸ் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பல்வேறு மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருந்த பத்ம விருதுகள் விழாவை உள்துறை அமைச்சகம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.