Published on 27/03/2020 | Edited on 27/03/2020
உலக அளவில் 190 நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டுகள் இன்று வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இந்தத் தேர்வானது ரத்து செய்யப்படுவதாக மனித மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வுகள் முடியாத நிலையில், மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்தேர்வு ஆனது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல காலவரம்பின்றி எந்தவித தேதியும் குறிப்பிடப்படாமல் நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.