
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வும் சட்டமன்ற தி.மு.க. துணைத் தலைவருமான துரைமுருகன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், 'என் தொகுதியில் காங்கேயநெல்லூரில் இருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாலாற்றில் ஒரு பாலம் அமைக்கப்படும் என்று தங்களால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, இரண்டு பட்ஜெட் தொடர் கூட்டங்களே வந்து போய்விட்டது, கேட்டால் அதிகாரிகள் ஆய்வில் இருக்கிறது என்கிறார்கள்.
அதைப்போல நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பொன்னையாற்றியில் குகையநெல்லூர் அருகில் ஒரு செக்டேம் கட்டப்படும் என்று கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தீர்கள், அதுவும் ஆய்வில் இருக்கிறது என்கிறார்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள்ளாகவே இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.