Skip to main content

மகாத்மா காந்தியின் பேத்திக்கு 7 ஆண்டு சிறை!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

gandhi great grand daughter

 

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின். தென்னாப்பிரிக்காவில் வசித்துவரும் இவர், இந்தியாவில் இருந்து மூன்று கண்டெய்னரில் கைத்தறிகள் வந்துள்ளதாகவும், அவற்றிற்கு இறக்குமதி மற்றும் சுங்கவரி செலுத்த பணமில்லை என கூறி எஸ்.ஆர்.மஹாராஜிடம் 6.2 மில்லியன் ரேண்ட் கோடி பணம் பெற்றுள்ளார். அவரிடம் கைத்தறியில் வணிகத்தின் லாபத்தில் பங்கு தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

 

மேலும், இந்தியாவில் இருந்து வந்ததாக அவர் கூறிய கண்டெய்னர்கள் தொடர்பாக சில ஆவணங்களையும் ஆஷிஷ் லதா ராம்கோபின் காட்டியுள்ளார். ஆனால் அந்த ஆவணங்கள் போலி என்பதும், இந்தியாவில் இருந்து அவ்வாறான எந்தக் கண்டெய்னரும் வரவில்லை என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து ஆஷிஷ் லதா ராம்கோபின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தென்னாப்பிரிக்க நீதிமன்றம், மோசடி செய்தற்காக ஆஷிஷ் லதா ராம்கோபின்னுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.