Skip to main content

50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பட்டங்களுக்கு செக் வைத்த டி.என்.பி.எஸ்.சி !

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

தமிழ்நாடு அரசு பணியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மய்யம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறன்றது. அரசு துறையில் பதவிகளுக்கு குறிப்பிட்ட துறைகளுக்கு குறிப்பிட்ட பட்டபடிப்பு கட்டாயமாக உள்ளது. ஆனால் தமிழக பல்கலைக்கழகங்களில் தனித்தனியே சில புதிய புதிய ஒவ்வொரு துறையும் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்கிறார்கள். 

 

t

 

அந்த சார்ப்பு படிப்புகளை படித்தால் அந்த குறிப்பிட்ட துறை படிப்புக்கு சமமானது என்று சொல்லி தேர்வுகள் எழுதி வந்தனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட பட்டபடிப்புகள் மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படும் என்று அதன் சார்பு படிப்பு பட்டங்கள் எதுவும் உண்மையான கல்வி தகுதியாக ஏற்க முடியாது என்று அறிவித்துள்து. 

 

அரசு துறையில் வேலை செய்யும் சிலர் தங்களின் அடுத்தக்கட்ட உயர்பதவிகளுக்கு பணியாற்ற பட்டபடிப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்கிற நிலை வருகிற போது தமிழகத்தில் உள்ள ஏராளமான பல்கலைகழகங்களில் வழங்கும் பட்டபடிப்பை படித்து தங்களுடைய பதவி உயர்வை பெற்றுக்கொள்கிறார்கள். 

 

அதே போல புதிதாக தேர்வு எழுதுபவர்களும் இதே போல் படித்து தேர்வுகளில் கலந்து கொள்கிறார்கள் என்பதால் இத்தகைய பட்டபடிப்புக்கு தற்போது தேர்வாணயம் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இந்த பட்டங்களை ஏற்க முடியாது என்று சில பல்கலைகழங்களின் பட்டப்படிப்புகளை சுட்டிகாட்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைகழகங்களில் நடத்தப்படும் 50க்கும் மேற்பட்ட இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற்றவர்கள் அரசு தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பிசிஏ படிப்பு பி.எஸ்.சி. கணித பாடத்திற்கு இணையான பட்டமாக கருத முடியாது. 

 

பாரதியார் பல்கலைகழகம், திருவள்ளுர் பல்கலைகழகம், காமராஜர் பல்கலைகழகம், பெரியார் பல்கலைகழகம் ஆகியவற்றில் வழங்கப்படும் எம்.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி பட்டம் விலங்கியல் பட்டத்திற்கு இணையான பட்டமாக கருத முடியாது. 

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி. பயன்பாடு இயற்பியல் பட்டப்படிப்பை எம்.எஸ்.சி. இயற்பியல் பட்டத்திற்கு இணையாக கருத முடியாது.   திருச்சி ஜோசப்கல்லூரியில் நடத்தப்படும் எம்.எஸ்.சி. புள்ளியல் மற்றும் தகவலியல் பட்டம், எம்.எஸ்.சி. கணிதத்திற்கு இணையாக கருத முடியாது. 

 

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வழங்கப்படும் பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம், பி.எஸ்.சி., மென்பொருள் மேம்பாடு ஆகிய பட்டங்களும் பி.எஸ்.சி. கம்பியூட்டர் சயின்ஸ் பட்டத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

எம்.எஸ்.சி. உயிர் அறிவியல் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை எம்.எஸ்.சி. விலங்கியல் பட்டத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக்ஸ் பட்டம், எம்.எஸ்.சி. இயற்பியல் பட்டத்திற்கு இணையாக ஏற்க முடியாது. 

 

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடத்தப்படும் பி.பி.ஏ.இரட்டை பட்டம், எம்.பி.ஏ. வணிக மேலாண்மை, சர்வேதேச வணிகம், மின்னணு வணிகம், மனிதவள மேலாண்மை, உலகளாவிய மேலாண்மை, ஆகிய பாடங்களை தேர்வாணயத்தின் எம்.பி.ஏ. பட்டத்திற்கு இணையாக கருத முடியாது. 

பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி கணிதம் ( நான்கு ஆண்டுகள் இரட்டை பட்டபடிப்பு ) பட்டத்தை பி.எஸ்.சி. கணிதம் பட்டத்திற்கு இணையாக கருத முடியாது. இதே அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ள பல இரட்டை பட்டங்களும் தேர்வாணயத்தால் கல்வி தகுதியாக ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 

 

இந்த குறிப்பிட்ட பட்டங்களை படித்து இதை சார்ந்த பட்டபடிப்பு என்று சொல்லி அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்