Published on 23/04/2025 | Edited on 23/04/2025

தமிழகத்தில் 12, 11, 10 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் நாளை 6 முதல் 9 ஆம் வகுப்பிற்கான ஆண்டு இறுதி தேர்வுகள் முடிகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடைவிடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்படும். ஏப்ரல் 30ஆம் தேதி ஆசிரியர்களுக்கு கடைசி பணிநாள் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.