
மொட்டை மாடியில் 50 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது மகாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மகாராஷ்ட்ராவின் நாக்பூர் மாவட்டம் உம்லெட் பகுதியில் வீட்டின் மேற்பரப்பில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டது. இதனால் அச்சமடைந்த வீட்டில் உரிமையாளர்கள் மேலே சென்று பார்த்த பொழுது மர்ம உலோக பொருள் விழுந்து கிடந்தது. சுமார் 50 கிலோ எடையும் நான்கு அடி நீளமும், 10 முதல் 12 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டதாக இருந்தது. மர்மமான முறையில் விழுந்த இந்த உலோகத்தால் மேல் தளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்தது.
அந்த பொருள் ராக்கெட்டின் உதிரிப் பாகமாக இருக்கலாம் அல்லது செயற்கைக்கோள் பாகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் யூகிக்க முடியாத அளவிற்கு வினோதமான அமைப்பில் இருந்ததால் விழுந்த மர்மப் பொருள் என்ன என தெரியாமல் இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான அந்த காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.