Published on 16/09/2021 | Edited on 16/09/2021

திருச்சி தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடராஜன் (51) - மகாலட்சுமி (49) தம்பதி. இவர்களுக்கு கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு உணவிற்கு வழியின்றி தினமும் அம்மா உணவகத்தில் உணவருந்தி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
குடும்ப வறுமை ஒரு பக்கமும், குழந்தையின்மையும் இருவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதால் இருவரும் இன்று வீட்டிலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் அலறும் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.