கொடைக்கானலில் சாலையோர கடைகளின் மீதுகார்மோதி விபத்துக்குள்ளானசிசிடிவிகாட்சிகள்வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்ஏரிசாலைபகுதி எப்பொழுதுமே சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழியும் பகுதியாக இருக்கும். எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் இந்த பகுதியில் சாலை ஓரம் பல கடைகள் வைக்கப்பட்டிருக்கும். அதுவும் இன்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள் என்பதற்காக அதிக சாலையோரக் கடைகள் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை வேளையில் வேகமாக வந்தகார்ஒன்று சாலையோர கடைகள் மற்றும் கடையில் நின்று கொண்டிருந்த வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மீதுமிகபலமாக மோதியது.
இந்த விபத்தில் குடியாத்தத்தைச் சேர்ந்தநவநீத்என்ற சுற்றுலாப் பயணிக்கும், சாலையோர வியாபாரியான வேளாங்கண்ணி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாககொடைக்கானல்போலீசார்விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்து குறித்தசிசிடிவிகாட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.